பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: சுட்டுக் கொன்ற சிறுமி!

By Manikanda Prabu  |  First Published Sep 24, 2023, 3:53 PM IST

பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த தனது தந்தையை சுட்டுக் கொன்றுள்ளார்


பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், கடந்த மூன்று மாதங்களாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது தந்தையை சுட்டுக் கொன்றுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரின் குஜ்ஜர்புரா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், கடந்த மூன்று மாதங்களாக தனது தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் சிறுமி அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

தந்தையே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் நரகவேதனையில் இருந்தததால், அவரை கொலை செய்ய முடிவு செய்த சிறுமி, அவரது துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றதாக வழக்கை விசாரித்து வரும் சோஹைல் காஸ்மி என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

காதல் திருமணம் செய்த நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.. இதுதான் காரணமா?

முன்னதாக, தனது மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்த ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் வெளிவந்துள்ளது.  தனது மைனர் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட எம். ரபீக்கிற்கு லாகூர் பாலின அடிப்படையிலான வன்முறை நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி மியான் ஷாஹித் ஜாவேத் மரண தண்டனை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!