
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை அசோக் நகர அடுத்த புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண். அதே பகுதி 3-வது அவென்யூவில் பிளாட்பாரத்தில் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி இரவு இவரது கடைக்கு மதுபோதையில் வந்த டைமண்ட் பாபு என்ற வாலிபர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதை தட்டிக்கேட்ட இளம்பெண்ணை கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அல்லாமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் டைமண்ட் பாபு கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு அல்லிகுளம் மகளிர் நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டைமண்ட் பாபுவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.10,500 அபராதம் விதிக்கப்பட்டது.