சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த மனைவி மண்வெட்டியால் அடித்து கொலை; ராமநாதபுரத்தில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Sep 23, 2023, 7:54 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த மனைவியை மண்வெட்டியால் வெட்டியும், கத்தியால் அறுத்தும் கணவனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் லட்சுமியின் கணவர் மதுவுக்கு அடிமையான  செல்வம் நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் செல்வம் தனது மனைவி லட்சுமியை சேர்ந்து வாழ அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு சம்மதிக்க மறுத்த லட்சுமியை கொலை செய்ய திட்டமிட்டு இருந்த செல்வம் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு சென்று இருசக்கர வாகனத்தில்  திரும்பிய மனைவி மீது செல்வம் தனது இரு சக்கர வாகனத்தைக் கொண்டு மோதியுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

விருதுநகரில் 15 வயது சிறுமியை அம்மாவாக்கிய நபர் போக்சோவில் கைது

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த லட்சுமியை மண்வெட்டியால் தலையில் ஓங்கி அடித்துள்ளார். பின்னர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் காவல் நிலையம் சென்ற செல்வம் அங்கு தனது ஆயுதத்தை ஒப்படைத்து சரணடைந்தார். பட்டப் பகலில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைவிட சிறப்பான மரியாதையை யாராலும் அளிக்க முடியாது; ஸ்டாலினுக்கு அன்புமணி பாராட்டு

click me!