விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில் இளங்கோவன் என்ற வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதாக அருப்புக்கோட்டை யூனியன் சமூக நல விரிவாக்க அலுவலர் சந்தனமாரிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மருத்துவமனைக்கு நேரில் சென்ற சந்தனமாரி மற்றும் அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதிகாரிகளிடம் சிறுமி கூறுகையில், பாலையம்பட்டி முத்தரையர் நகர் பகுதியைச் சேர்ந்த உறவினர் இளங்கோவன் (வயது 24) என்வருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், பாலையம்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு செல்லும் பொழுது அந்த இளைஞருடன் அவ்வபோது தனிமையில் இருந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.
இதைவிட சிறப்பான மரியாதையை யாராலும் அளிக்க முடியாது; ஸ்டாலினுக்கு அன்புமணி பாராட்டு
இதனால் சிறுமிக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் சிறுமியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அடுத்த மாதம் வரும்படி தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள தமிழர்களை தமிழகத்திற்கே அழைத்துக்கொள்ளுங்கள் - வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை
இந்நிலையில் சிறுமிக்கு கடந்த 20ம் தேதி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமி உடனடியாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சந்தனமாரி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இளங்கோவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.