பத்ம சேஷாத்ரி பள்ளியில் யு.கே.ஜி. சீட்டுக்கு ரூ.5 லட்சம் லஞ்சம்… ஓய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி மீது புகார்!

By manimegalai aFirst Published Oct 3, 2021, 6:49 PM IST
Highlights

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகாரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பள்ளி தொடர்பான மேலும் ஒரு புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகாரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பள்ளி தொடர்பான மேலும் ஒரு புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சர்ச்சைகளுகு பெயர் போனவர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி என்றால் அது மிகையாகாது. பா.ஜ.க.-வுக்கும், தான் சார்ந்த பிராமனர் சமூகத்திற்கும் ஆதரவாக மதுவந்தி கூறிய பல கருத்துகள் இதற்கு முன்னர் சர்ச்சையாகியுள்ளன.

சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான பத்ம சேஷாத்ரி பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த பள்ளி ஒய்.ஜி.மகேந்திரன் உறவினர்களுக்கு சொந்தமானது என்பது அப்போது தான் பலருக்கும் தெரிய வந்தது.

பாலியல் புகார் எழுந்ததுமே தங்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று மறுப்பு தெரிவித்த ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தி, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். இந்தநிலையில் பத்ம சேஷாத்ரி பள்ளியில் யு.கே.ஜி. படிக்க சீட் வாங்கி தருவதாகக் கூறி 5 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக மதுவந்தி மீது புகார் எழுந்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த ராஜகோபால் என்பவர் தான் மதுவந்தி மீது இந்தபுகாரை தெரிவித்துள்ளார். தன்னுடைய மகளுக்கு பத்மா சேஷாத்ரி பள்ளியில் யு.கே.ஜி. சீட் வாங்குவதற்காக மதுவந்தியிடம் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ஆனால் சீட்டு வாங்கி கொடுக்காமல் பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்து வருவதாக கேகே நகர் காவல் நிலையத்தில் மதுவந்தி மீது ராஜகோபால் புகார் அளித்திருக்கிறார். இந்த குற்றச்சாட்டு குறித்து மதுவந்தி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

click me!