உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. பொதுமக்களிடம் வசமாக சிக்கியது.. பிறகு நடந்த தரமான சம்பவம்..!

Published : Oct 03, 2021, 05:45 PM IST
உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. பொதுமக்களிடம் வசமாக சிக்கியது.. பிறகு நடந்த தரமான சம்பவம்..!

சுருக்கம்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பூதிநத்தம் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி ஜமுனா (38). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகும் நிலையில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பெங்களூருவில் தங்கி கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் வேடியப்பன், 2 வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

தர்மபுரி அருகே வீட்டில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை அக்கம் பக்கத்தினர் பூட்டி சிறை வைத்ததால் அவமானம் தாங்க முடியாமல் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பூதிநத்தம் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி ஜமுனா (38). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகும் நிலையில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பெங்களூருவில் தங்கி கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் வேடியப்பன், 2 வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் அனுமந்தன் என்பவருடன் ஜமுனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். மேலும், ஊர் மக்களும் கண்டித்தனர். ஆனாலும், இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இந்நிலையில், கடந்த 29ம் தேதி ஜமுனாவின் வீட்டிற்கு அனுமந்தன் வந்துள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் வெளிப்புறமாக கதவை பூட்டி இருவரையும் சிறை வைத்தனர். இதனையடுத்து, 

பொதுமக்களிடம் சிக்கியதால் அவமானம் தாங்க முடியாமல் ஜமுனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜமுனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு