திருப்பத்தூர் அருகே பெண்ணை காப்பாற்றச் சென்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை

By Velmurugan s  |  First Published Aug 7, 2023, 2:56 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியில் மதுபோதையில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை தட்டி கேட்ட நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியைச் சேர்ந்தவர் கிரண் குமார் (வயது 50). இவருடைய மனைவி துர்கேஸ்வரி வயது (44) சில வாரங்களுக்கு முன்பு துர்கேஸ்வரி மற்றும் சண்முகம் ஆகிய இருவருக்கும் இடையே வாய் சண்டை அதிகமாகியுள்ளது. இதனால் தனது வீட்டிற்கு முன்பு அமர்ந்து மது அருந்துவதை கைவிடுமாறு துர்கேஸ்வரி பலமுறை கூறியும் சண்முகம் அதனை பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகம் திரும்பவும் அதே போல் அவர்கள் வீட்டு முன்பே மது அருந்திக் கொண்டிருந்தார். இதனை துர்கேஸ்வரி தட்டி கேட்கும் பொழுது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு இருவரையும் குத்தச் சென்ற பொழுது லக்கிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் வல்லரசு என்பவர் அதனை தடுக்க முயன்றுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

ஆம்பூர் அருகே அசுர வேகத்தில் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்; 2 பேர் பலி, 3 பேர் கவலைக்கிடம்

அப்போது சண்முகம் சர மாறியாக குத்தியதில் வல்லரசு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த துர்கேஸ்வரி உடனடியாக திருப்பத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வல்லரசுவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்  கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சண்முகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிடு கிடுவென குறைந்த மேட்டூர் அணை நீர் மட்டம்; முழுவதுமாக வெளியில் தெரியும் நந்தி சிலை

மேலும் தனது வீட்டிற்கு முன்பு மது அருந்தக்கூடாது என கூறியதின் காரணமாக தன்னை கொலை செய்த வந்த இடத்தில்   காப்பார்த்த வந்தவரை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

click me!