தூக்கத்தை கெடுத்த ஒன்றரை வயது மகன்.. துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. மூக்கில் வாயில் ரத்தம் வடிந்து பலி.

Published : Aug 13, 2022, 01:05 PM ISTUpdated : Aug 13, 2022, 02:02 PM IST
 தூக்கத்தை கெடுத்த ஒன்றரை வயது மகன்.. துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. மூக்கில் வாயில் ரத்தம் வடிந்து பலி.

சுருக்கம்

தூக்கத்தை கெடுத்த ஒன்றரை வயது மகனை தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் திடீரென அடங்கியாதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்ததில் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

தூக்கத்தை கெடுத்த ஒன்றரை வயது மகனை தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் திடீரென அடங்கியாதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்ததில் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சில நேரங்களில் மனிதர்கள் விலங்குகளை விட கொடூரமாக நடந்து கொள்கின்றனர். தெய்வத்துக்கு நிகராக கள்ளம் கபடமற்ற குழந்தைகளிடம் கூட தங்களது நியாயமற்ற வெறுப்புகளை காட்டுகின்றனர். சிலர் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, குழந்தைகளை அடித்து துன்புறுத்துவது போன்ற கொடூரங்களில் தாய் தந்தையர் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படியுங்கள்: தொடர்ந்து மாணவிக்கு ஆபாச மெசேஜ்.. தொடக்கூடாத இடங்களில் கை வைத்து அசிங்கம்.. தமிழ் ஐயா சில்மிஷம்.

இதுபோன்ற சைக்கோ தனமான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வந்தவண்ணம் உள்ளன. இந்த வரிசையில் தூக்கத்திற்கு தடையாக இருந்த குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. முழு விபரம் பின்வருமாறு:-  அரியானா மாநிலம் பரீதாபாத்தில் வெள்ளிக்கிழமை வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஒரு நபர் உறங்கிக் கொண்டிருந்தார். அவரது மனைவி வெளியில் சென்றிருந்தார், அதற்குள் அவர்களின் ஒன்றரை வயது மகன் அம்மாவைக்  தேடி அழுதான்.

இதையும் படியுங்கள்: பிறந்த பச்சிளம் குழந்தையை பக்கெட் தண்ணீரில் கொன்ற தாய்.. வெளியான அதிர்ச்சி தகவல்

அப்போது அந்த குழந்தையின் தந்தையின் தூங்கத்திற்கு இடையூறு ஏற்பட்டது. குழந்தையை சமாதானப்படுத்த அவர் முயற்சித்தார், ஆனால் முடியவில்லை, தொடர்ந்து அழுததால் ஆத்திரமடைந்த அந்த தந்தை குழந்தையின் கழுத்தை நெறித்தார். அதில் குழந்தை உயிருக்கு போராடியது, சில நொடிகளில் துடிதுடித்து உயிரிழந்தது.   சத்தமாக அழுதுகொண்டிருந்த குழந்தை திடீரென அடக்கியதால் பக்கத்து வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த குழந்தைக்கு என்ன ஆயிற்று என அவர்கள் வந்து பார்த்தனர். அப்போது அந்த குழந்தை மூக்கில், வாயில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்தது.

குழந்தை இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை அங்கிருந்து தப்பி ஓடினார், இதனையடுத்து வீட்டுக்கு வந்து பார்த்த மனைவி, குழந்தை உயிரிழந்ததை கண்டு கதறி அழுதார், ரக்ஷாபந்தன் கொண்டாட அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இந்த  கொடூரம் நடந்து விட்டதே என கூறி தலையிலடித்துக் கதறினார்.

பின்னர் தனது மகன் மூக்கில் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.  
 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி