சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் செங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் ஸ்ரீதர்(26). இவருக்கும் பழையூர் பகுதியைச் சேர்ந்த விக்ரம் தரப்புக்கும் இடையே பைக் ரேஸ் ஓட்டுவதில் முன்விரோதம் இருந்துள்ளது.
சேலம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் செங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் ஸ்ரீதர்(26). இவருக்கும் பழையூர் பகுதியைச் சேர்ந்த விக்ரம் தரப்புக்கும் இடையே பைக் ரேஸ் ஓட்டுவதில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மைக் செட் வைப்பதில் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது விக்ரம் தரப்பைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீதரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த ஸ்ரீதர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதை அடுத்து விக்ரம், மோகன்குமார், கார்த்திக், லித்திஷ், கோகுல், கார்த்திக், பெருமாள், நித்திஷ்கண்ணன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்கள் அப்பாவிகள் எனவும் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் இவர்கள்தான் என அப்பகுதியில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரின் புகைப்படங்களை மனுவில் இணைத்துள்ளனர்.