எனக்கு இன்னும் அடங்கல! ஒன்ஸ்மோர் கேட்ட கள்ளக்காதலன்! மறுத்த கள்ளக்காதலி! இறுதியில் காட்டில் நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Jan 7, 2023, 10:00 AM IST

தருமபுரி மாவட்டம் சித்தேரியை அடுத்த வெள்ளாம்பள்ளியை சேர்ந்த பார்வதி (32). 9 வருடங்களுக்கு முன் கணவர் இறந்துவிட்டதால் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், (42) என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 


இரண்டாவது முறையாக உல்லாசத்துக்கு வர மறுத்ததால் ஆத்திரத்தில் கள்ளக்காதலியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துவிட்டு 2வது மனைவி வீட்டில் பதுங்கி இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தருமபுரி மாவட்டம் சித்தேரியை அடுத்த வெள்ளாம்பள்ளியை சேர்ந்த பார்வதி (32). 9 வருடங்களுக்கு முன் கணவர் இறந்துவிட்டதால் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், (42) என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் கீழானூர் காப்பு காட்டு பகுதிக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

வழக்கம் போல சக்திவேல் பார்வதியை அரூருக்கு வரவழைத்து, அரூரில் இருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் இருவரும் கீழானூர் காப்பு காட்டுக்குள் சென்று  உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர், இரண்டாவது முறை சக்திவேல் பார்வதியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு அவள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சக்திவேல் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தலையில் அடித்து முகத்தை சிதைத்து உள்ளார்.  ரத்த வெள்ளத்தில் சரிந்த பார்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, சக்திவேல் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதை அடுத்து 2வது மனைவி வீட்டில் பதுங்கி இருந்தத சக்திவேலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

click me!