ஆன்லைன் ஆப் மூலம் கடன் மோசடி; 5 பேர் கைது, 500 சிம் கார்டுகள் பறிமுதல்

By Velmurugan sFirst Published Jan 6, 2023, 4:18 PM IST
Highlights

திருப்பூரில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்றவர்களை நூதன முறையில் ஆபாசமாக சித்தரித்து பணப்பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 500 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் கடன் ஆப் மூலமாக 3000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் பெற்ற கடனை 5 நாட்களில் திருப்பி வட்டியுடன் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆபாச வலைத்தளங்களில் சித்தரிக்கப்பட்ட படங்களை வெளியிட்டு விடுவதாக ஒரு சிலர் போனில் மிரட்டி உள்ளனர். 

இதையடுத்து அந்த பெண் திருப்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் காவல் துறையினர் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண்ணை மிரட்டிய கும்பல் வெளிநாட்டு தொடர்புடன் செயல்பட்டு இருப்பது தெரிய வந்தது. 

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி; கமல்ஹாசன் விருப்பம்

கூகுள் ப்ளே ஸ்டோரில் வரக்கூடிய நான்கு தனியார் அப்ளிகேஷன் மூலமாக கடன் கொடுப்பதாக கூறி கடன் கொடுத்துவிட்டு மீண்டும் கடனை வசூலிப்பதற்காக கடன் பெற்றவரை தொடர்பு கொண்டு தரக்குறைவாக பேசுவது, மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தது. 

மேலும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டு பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது போன்று தினமும் 3500-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதை அடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த கும்பல் திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

தமிழ்நாடு வரலாறு பற்றி ஆர்எஸ்எஸ் பிரசாரக்காரருக்கு என்ன தெரியும்? ஆளுநருக்கு வைகோ கடும் கண்டனம்

மேலும் கால் சென்டர் போன்று அலுவலகம் அமைத்து 500க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தி தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த அலுவலகத்தை சுற்றிவளைத்த திருப்பூர் சைபர் கிரைம் காவல் துறையினர் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். 

வெளிநாட்டு தொடர்பு எண் கொண்ட சிம் கார்டுகளை உள்ளூர் எண்ணில் மாற்றக்கூடிய சிம்கார்டு பாக்ஸ்கள், அதிவேக இன்டர்நெட் வழங்கக்கூடிய மோடம், ஏடிஎம் கார்டுகள் சிம்கார்டுகள் என பல்வேறு கருவிகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். மேலும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்குமாறு திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாங் சாய் தெரிவித்து இருக்கிறார்.

click me!