வடமாநில தொழிலாளி குத்திக் கொலை: கோவையில் பரபரப்பு!

By Manikanda Prabu  |  First Published Apr 7, 2024, 6:35 PM IST

வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் அவரை கொலை செய்துள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


கோவை, கிராஸ்கட் சாலை, சுமங்கலி ஜூவல்லர்ஸ் நகைக் கடை பின்புறம் தனியாருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. அங்கு. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து 6 தொழிலாளர்கள் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு அதில் 5 பேர் தனியாக ஒரு பகுதியில் உறங்கியுள்ளனர். 23 வயது ரிங்கு குமார் என்ற இளைஞர் தனியாக படுத்து உறங்கி உள்ளார்.

அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கு உறங்கிக் கொண்டு இருந்த ரிங்கு குமாரின் சட்டை பையில் வைத்து இருந்த செல்போனை திருட முயன்றதாக தெரிகிறது. உடனடியாக விழித்துக் கொண்ட ரிங்கு குமார் கூச்சலிட்டார்.

Tap to resize

Latest Videos

சுற்றுலா சென்ற இடத்தில் உல்லாசம்! கர்ப்பமான 17 வயது பள்ளி மாணவி! சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த டாக்டர் கைது

இதைக் கேட்டு அருகில் உறங்கிக் கொண்டு இருந்த ஐந்து பேர்  வருவதற்குள் அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ரிங்கு குமாரை கழுத்தில் மூன்று முறை குத்தி விட்டு அங்கு இருந்து தப்பி ஓடினார். இதில், படுகாயமடைந்த ரிங்கு குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

உடனடியாக ரிங்கு குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அவரது சக ஊழியர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து காட்டூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!