சினிமா பாணியில் நடந்த பயங்கரம்.. லாரி ஏற்றி மாமனாரை கொன்ற மருமகன்.. போலீசில் பகீர் வாக்குமூலம்!

By vinoth kumar  |  First Published Apr 7, 2024, 8:10 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விநாயகா நகரைச் சேர்ந்தவர் துரை (57). கடந்த ஏப்ரல் 2ம் தேதி மாலை எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.


கோவில்பட்டி அருகே  தகராறு காரணமாக சொந்த மாமனாரை லாரி ஏற்றி கொலை செய்த மருமகன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விநாயகா நகரைச் சேர்ந்தவர் துரை (57). கடந்த ஏப்ரல் 2ம் தேதி மாலை எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிய போலீசார் கோவில்பட்டி சாலையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், ஒரு லாரி அதிவேகமாக கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரத்தை நோக்கி சென்றதும் அதே லாரி, சிறிது நேரத்தில் மீண்டும் கோவில்பட்டியை நோக்கி சென்றது பதிவாகி இருந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: கள்ளக்காதலனை வீட்டில் அனுமதிக்க மறுக்குறியா? கணவரை வழிக்கு கொண்டுவர மனைவி செய்த காரியம்!

இதனையடுத்து எட்டயபுரம் அருகே தோள்மலைப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (43) என்பவரை பிடித்து விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. துரையின் மருமகன் உடையார் என்ற உதயகுமார்  ராஜா ஏற்பாட்டின் பேரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதச் செய்து  விபத்து நடந்தது போல் துரையை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக துரை மருமகன், லாரி உரிமையாளர் நாகராஜ், டிரைவர் சிவராம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க:  செல்போனில் ஆபாச வீடியோ காட்டி அதுபோல செய்யலாமா பள்ளி மாணவியிடம் கேட்ட தலைமை ஆசிரியர்! இறுதியில் நடந்தது என்ன?

கைதான உடையார் என்ற உதயகுமார் ராஜா அளித்துள்ள வாக்குமூலத்தில்: மாமனாரும், நானும் நில புரோக்கர் மற்றும் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்தோம். இதுசம்பந்தமாக எனக்கும், மாமனாருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் மாமனார் தன்னை கேவலமாக பேசியதால் தீர்த்துக்கட்டினேன் என்று மருமகன் கூறியுள்ளார். 

click me!