சென்னையில் உறவினரை துடிதுடிக்க கொன்றுவிட்டு நாடகமாடிய கள்ளக்காதல் ஜோடி! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

Published : Apr 05, 2024, 08:07 AM ISTUpdated : Apr 05, 2024, 08:09 AM IST
சென்னையில் உறவினரை துடிதுடிக்க கொன்றுவிட்டு நாடகமாடிய கள்ளக்காதல் ஜோடி! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

சுருக்கம்

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மோகன் புஜக்கர் (38) என்பவர் வீட்டில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது உறவினரான பெண் சோனியா (33) என்பவர் மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த உறவினரை கொடூரமாக துடிதுடிக்க கொலை செய்துவிட்டு நாடகமாடிய  வடமாநில கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மோகன் புஜக்கர் (38) என்பவர் வீட்டில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது உறவினரான பெண் சோனியா (33) என்பவர் மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோகன் புஜக்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதையும் படிங்க: செல்போனில் ஆபாச வீடியோ காட்டி அதுபோல செய்யலாமா பள்ளி மாணவியிடம் கேட்ட தலைமை ஆசிரியர்! இறுதியில் நடந்தது என்ன?

இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மோகன் புஜக்கரை யாரோ கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி சோனியா மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த சுசாந்தா பர்மன் (44) ஆகிய 2 பேரை பிடித்து போலீசாரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. 

இதையும் படிங்க:  உல்லாசத்தின் போது ஓயாமல் அழுத குழந்தை! கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்! போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அம்பலம்!

மோகன் புஜக்கர் இங்கு தங்கி வேலை செய்து வந்த நிலையில் சோனியாவிற்கும், சுசாந்தா பர்மன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சோனியாவை பார்க்க சுசாந்தாபர்மன் அடிக்கடி வீட்டிற்கு சென்றதால் மோகன் புஜக்கர் அவரை கண்டித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் சுசாந்தா பர்மன் சோனியா வீட்டிற்கு சென்றபோது அங்கு வந்த மோகன் புஜக்கர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுசாந்தாபர்மன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகன் புஜக்கர் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். போலீசில் தாம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மோகன் புஜக்கர் நாடகமாடியது அம்பலமானது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை