தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் வெடித்த மோதல்; குடும்ப தலைவரை வெட்டி கொன்ற மனைவி, மகன் - சேலத்தில் பரபரப்பு

Published : Apr 03, 2024, 05:09 PM ISTUpdated : Apr 03, 2024, 05:13 PM IST
தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் வெடித்த மோதல்; குடும்ப தலைவரை வெட்டி கொன்ற மனைவி, மகன் - சேலத்தில் பரபரப்பு

சுருக்கம்

தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் ஏற்பட்ட சண்டையால் மகனே தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தாண்டவராயபுரம், மாதா கோவில் தெருவில் வசிப்பவர் லட்சுமணன் மகன் கருப்பண்ணன் (வயது 67). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு, மனைவி மாரியம்மாள் (65), மகன் ராஜா (40), மகள் சந்திரா (35), உள்ளனர். மகன் ராஜாவுக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவியை பிரிந்து இரண்டாது மனைவியுடன் இருந்து வருகிறார். மகள் சந்திராவுக்கு திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் ராஜா கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜாவின் தந்தை கருப்பண்ணன் அவரது பெயரில், தாண்டவராயபுரம் மற்றும் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள சொத்தை மகன் ராஜாவின் முதல் மனைவி மகன் சங்கர் பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளார். 

மோடி, அமித்ஷா என்ற மோசமான சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் - திருமாவளவன் பேச்சு

இதனால், தந்தை கருப்பண்ணனுக்கும் மகன் ராஜாவுக்கும், கடந்த சில ஆண்டுகளாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கருப்பண்ணன் தனது மனைவி மாரியம்மாளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கருப்பண்ணன் மகன் ராஜா எனது பெயரில்  சொத்தை எழுதி வைக்குமாறு  ராஜாவும் அவரது தாய் மாரியம்மாளும் கருப்பண்ணனிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

இரு வாரங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்சியில்  கருப்பண்ணன், அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. இந்நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த கருப்பண்ணனை அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகிய இருவரும் அரிவாளில் சரமாரியாக வெட்டி விட்டு  தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த கருப்பண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பாஜக ஒரு வாஷிங் மெஷின் ஊழல்வாதிகளை கட்சியில் சேர்த்து தூய்மையாக்கிவிடுவார்கள்; பிடிஆர் விமர்சனம்

இது குறித்து தகவலறிந்து வந்த ஆத்தூர் நகர காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மனைவி மாரியம்மாள், மகன் ராஜாவையும் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து தகராறில் பட்டப் பகலில் மகனே தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?