இறந்த பெண்ணின் உடலில் சதையைத் தின்ற விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு மயூர்பஞ்ச் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒடிசாவில் ஜூலை 12ஆம் தேதி தகன மைதானத்தில் இறந்த பெண்ணின் சதையை இரண்டு ஆண்கள் தின்றது தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மயூர்பஞ்ச் மாவட்ட ஆட்சியரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.
மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ராதாகந்தா திரிபாதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம் ஜூலை 20 அன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சுந்தர் மோகன் சிங் (58) மற்றும் நரேந்திர சிங் (25) ஆகிய இருவரும் படாசாஹி காவல் நிலையத்திற்குட்பட்ட தந்துனி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பந்தாசாஹி கிராமத்திற்கு அருகிலுள்ள தகனம் செய்யும் மைதானத்தில் இறந்த பெண்ணான மதுஸ்மிதா சிங் (25) என்பவரின் உடலில் எடுத்து சதையை எடுத்துச் சாப்பிட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களுக்கும் பரவும் மணிப்பூர் பதற்றம்! மிசோரத்தில் இருந்து வெளியேறும் மெய்தி மக்கள்!
தகனம் செய்யும்போது மழை பெய்ததால் உடலை முழுமையாக எரிக்க முடியவில்லை. இதனால் பாதி எரிந்த நிலையில் இருந்த உடலில் இருந்து ஒரு சிறு பகுதியை எடுத்துவந்து இருவரும் சாப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், மனித இறைச்சியை சாப்பிட்டு, உள்ளூர் பழக்கவழக்கங்களை மீறிய இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் என மனுதாரரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகாருக்கு போலீசார் ஒடிசா மாந்திரீக வேட்டை தடுப்புச் சட்டம், 2013 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் திரிபாதி குற்றம் சாட்டுகிறார். ஹரிச்சந்திர சஹாயதா யோஜனா திட்டத்தின் கீழ் இறந்தவரின் குடும்பத்திற்கு உதவி பெற உரிமை உண்டு என்றும் அந்த நிதியுதவி அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் திரிபாதி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் சாத்தியமான அனைத்து கோணங்களிலும் விரிவான விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் ராதாகந்தா திரிபாதி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையம், நான்கு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு மயூர்பஞ்ச் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேவையான அறிக்கைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படாவிட்டால், ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தவிடும் எனவும் தேசிய மனித உரிமைகள் ஆணையும் கூறியுள்ளது.
நீதிமன்றத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு நிச்சயம் விதிவிலக்கு வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்