செல்போனை காணோம்: கொடைரோட்டில் போதை ஆசாமிகள் ரகளை!

By Manikanda Prabu  |  First Published Jul 23, 2023, 2:30 PM IST

கொடைரோடு அருகே மதுபோதையில், ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே  கொடைரோடு மெயின் ரோட்டில் தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கொடைரோடு அருகே விளாம்பட்டி சிவா (27), மாயி(23), முகேஷ் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து நேற்று இரவு மது அருந்திக் கொண்டிருந்தனர்.

மது போதைக்கு தலைக்கு ஏறிய நிலையில் எங்களது செல்போனை காணவில்லை என மதுக்கடையில் இருந்து அனைவரையும் அவர்கள் மூவரும் தகாத வார்த்தையில் திட்டி உள்ளனர். அப்போது மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்த கொடை ரோட்டை சேர்ந்த ராஜூ அவர்கள் மூவரையும் தட்டி கேட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் கொலை வழக்கு! திடீர் திருப்பம்! தங்கையை அக்காவை போட்டு தள்ளியது அம்பலம்.!

இதனால் கோபாமடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து ராஜூவை கடிமையாக தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மதுக்கடை பணியாளர்கள் அம்மையநாயக்கனூர்காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை கடையை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், வெளியே செல்ல மறுத்து மீண்டும் போலீசார் முன்னிலையில் ராஜூவை கடுமையாக அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் 3  பேரையும் கைது செய்த அம்மையநாயக்கனூர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைந்தனர். இந்த சம்பவத்தை அங்குள்ள ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!