மாதவிடாயை காரணம் காட்டி முதலிரவை தள்ளிப் போட்ட புது மனைவி.. 7வது நாள் நகை பணத்துடன் எஸ்கேப்.

By Ezhilarasan BabuFirst Published May 13, 2022, 4:17 PM IST
Highlights

மாதவிடாயை காரணம்காட்டி முதலிரவை தள்ளிப்போட்ட புது மனைவியை ஏழாவது நாளில் தங்க நகை மற்றும் பணத்துடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இச் சம்பவம் நடந்துள்ளது.

மாதவிடாயை காரணம்காட்டி முதலிரவை தள்ளிப்போட்ட புது மனைவியை ஏழாவது நாளில் தங்க நகை மற்றும் பணத்துடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இச் சம்பவம் நடந்துள்ளது.

காதல் திருமணம் கள்ளக்காதல் போன்ற சம்பவங்களை மையப்படுத்திய பெரும்பாலான குற்றங்கள் அரங்கேறி வருகிறது. பொய் சொல்லி திருமணம் செய்து ஏமாற்றுவது அல்லது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது என விதவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட பெண் ஒரே வாரத்தில் பணம் தங்க நகைகளுடன் மாயமாகியுள்ள மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ராகுல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லலிதா இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. பெரியோர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த நிலையில் அவர்களுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலிரவன்று அவரிடம் தனக்கு பீரியட்ஸ் ஆகிறது அதனால் முதலிரவை மூன்று நாட்கள் தள்ளிப்போடலாம் எனக் கேட்டுள்ளார். அதற்கு கணவன் ராகுலும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில்  4 நாட்களாகியும் லலிதா அதையே கூறி வந்ததாக தெரிகிறது. இதனால் கணவனுக்கு ஒன்றும் புரியாமல் திகைத்து வந்தார். பின்னர் திடீரென்று திருமணம் நடந்த ஏழாவது நாளில் அந்தப் பெண்  தங்க நகை வெள்ளி பொருட்கள் மற்றும் 3 லட்சம் ரொக்கப் பணத்துடன் மாயமானார். இந்நிலையில் மனைவியை எங்கு தேடியும் காணவில்லை, இதனால் பதட்டமடைந்த ராகுல் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இச் சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல  சதீஷ்கரில் மோசடி சம்பவம் நடந்துள்ளது. சத்தீஸ்கரில் திருட்டு திருமண கும்பல் திருமணம் செய்துகொள்வதாக கூறி பணம் நகைகளுடன் மாயமாகியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கு பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் இளைஞர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதுபோன்ற இளைஞர்களை குறிவைத்து கவர்ந்திழுக்கும் சில மோசடி பெண்கள். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அதிகளவில் வரதட்சணை கேட்டு பின்னர் மாயமானது அரங்கேறி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் வடக்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் அதிகளவில் அரங்கேறி வருகிறது குறிப்பிடத்தக்கது. 
 

click me!