அடப்பாவிங்களா.. இதுக்காகவா புதுமாப்பிள்ளை கொலை செஞ்சீங்க.. குற்றவாளிகள் சொன்ன பகீர் வாக்குமூலம்..!

By vinoth kumarFirst Published Oct 28, 2022, 12:21 PM IST
Highlights

ஒரே மகள் என்பதால் பெற்றோர், தலைதீபாவளிக்காக  தங்கள் வீட்டுக்கு அழைப்பு விடுத்தனர். இதனால் சரத்குமார், மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்று தலை தீபாவளி கொண்டாடினர். இதனையடுத்து, கடந்த 24ம் தேதி இரவு 7 மணிக்கு சரத்குமார் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட மாமனார் உமாபதியுடன் சோளிங்கர் அடுத்த ஐம்பேடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார். 

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை அடுத்த ஐயனேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(22). டிஜே இசைக் குழு கலைஞர். இவருக்கும்  ஆயலாம்பேட்டையை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்கள் காதல் விவகாரம் இருவீட்டார் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 5 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்த கொண்டனர். 

இதையும் படிங்க;- சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை துண்டிப்பு... சிதறி கிடந்த பூஜை பொருட்களால் பரபரப்பு..!

இந்நிலையில், ஒரே மகள் என்பதால் பெற்றோர், தலைதீபாவளிக்காக  தங்கள் வீட்டுக்கு அழைப்பு விடுத்தனர். இதனால் சரத்குமார், மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்று தலை தீபாவளி கொண்டாடினர். இதனையடுத்து, கடந்த 24ம் தேதி இரவு 7 மணிக்கு சரத்குமார் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட மாமனார் உமாபதியுடன் சோளிங்கர் அடுத்த ஐம்பேடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார். 

அப்போது, 4 இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென சரத்குமாரை தாக்கியது. தடுக்க முயன்ற மாமனாரை தாக்கிவிட்டு பின்னர் சரத்குமாரை அந்த கும்பல் பைக்கில் கடத்திச் சென்றது. சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கூடலூர் அருகே உள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பினர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரன்(24), கோபி(24), அசோக்பாண்டியன்(24), துரைபாண்டியன்(23) ஆகிய 4 பேரை கைது செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் ஞானகொல்லை பகுதியில் இருந்து ஆர்.கே.பேட்டை கிராமத்திற்கு நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சரத்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் வேனில் சென்றனர். ஐப்பேடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சென்ற பைக் மீது அவர்களது வேன் உரசியது. இதனால்  இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில். வேனில் சென்றவர்கள் பைக்கில் வந்த நபர்களை தாக்கியுள்ளனர். இதுதொடர்பான புகாரின்பேரில் பைக்கில் வந்தவர்களை ஆர்.கே.பேட்டை போலீசார் கைது செய்தனர்.

கொலையான சரத்குமார் வேனில் வந்தவர்களுக்கு ஆதரவாக பேசினார். இந்த முன்விரோத தகராறில் சரத்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைதான 4 பேரை சோளிங்கர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி நேற்றிரவு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;- தலையில் ஒரே போடு! 18 வெட்டுகள்! 5 வருட காதலியை துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் கொன்ற காதலன்!என்ன காரணம் தெரியுமா?

click me!