கழிவறையில் வீசப்பட்ட குழந்தை... தனியார் மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்!!

Published : Oct 07, 2022, 07:34 PM IST
கழிவறையில் வீசப்பட்ட குழந்தை... தனியார் மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்!!

சுருக்கம்

கன்னியாகுமரி அருகே பிறந்த குழந்தையை கழிவறையில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி அருகே பிறந்த குழந்தையை கழிவறையில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பி.எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் பீர். அவரது மனைவி ஷிபானா. இவர் நேற்று பிரசவத்திற்காக நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று இரவு ஷிபானாவுக்கு பிரசவம் நடந்தது. பிரசவம் முடிந்து செவிலியர்கள் குழந்தையை எடுத்து சென்றதோடு, குழந்தை குறித்து எந்த தகவலையும் உறவினர்களுக்கு சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அந்த பெண்ணை விட்று.. அவள் உனக்கு தங்கச்சிடா .. காதல் ஜோடியை பிரிக்க பாஜக Ex MLA, ஊர் பெரியவர்கள் டார்ச்சர்

பின்னர் உறவினர்கள் குழந்தையை தேடியபோது, குழந்தை துணிகளால் சுற்றப்பட்டு மருத்துவமனை கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் குழந்தை இறந்து பிறந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து தவறான முறையில் பிரசவம் பார்த்ததால் தான் குழந்தை இறந்து பிறந்தது என்றும், அதை மறைக்கவே செவிலியர்கள் குழந்தையின் சடலத்தை கழிவறையில் கொண்டு சென்று வைத்துள்ளனர் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியதோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மகனை டைவர்ஸ் செய்ய திட்டமிட்ட மருமகள்.. மாமனார் போட்ட ஸ்கெட்சில் மாட்டிய அப்பாவி மருமகள் !

மேலும் இதுக்குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுக்குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனிடையே பிறந்த குழந்தையை கழிவறையில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!