நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(40). பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் நெல்லையப்பர் கோயிலில் உள்ள கோசாலை பராமரிப்பு பணிகளையும் தற்காலிகமாக பார்த்து வந்தார்.
நெல்லையில் பால் வியாபாரி மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(40). பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் நெல்லையப்பர் கோயிலில் உள்ள கோசாலை பராமரிப்பு பணிகளையும் தற்காலிகமாக பார்த்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் கோயில் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் வெளியே செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளப்பி சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் கண்ணனை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வண்டியே அங்கேயே போட்டுவிட்டு உயிர் பயத்தில் ஓடினார். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தது.
இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்கள் கண்ணன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.