திருவள்ளூரில் இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு கொடூர கொலை; போலீசார் விசாரணை

Published : Dec 02, 2023, 05:26 PM ISTUpdated : Jul 20, 2024, 12:14 AM IST
திருவள்ளூரில் இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு கொடூர கொலை; போலீசார் விசாரணை

சுருக்கம்

பொன்னேரி அடுத்த மெதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இரு சக்கரத்தில் வந்த 4 பேரில் இளைஞர் ஒருவரை  பின்புறம் கைகளை கட்டி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் ஊராட்சி மன்றம் அருகே பழவேற்காடு சாலையில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொன்னேரி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது பின்புறமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் தனியாகவும், தலை தனியாகவும் இருந்துள்ளது. இரு சக்கர வாகனம் ஒன்றில் 4 பேர் வந்ததாகவும், அதில் இருந்த  சுமார் 28 வயது நிரம்பிய இளைஞரின் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில், அவரை இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறக்கி அரிவாளால் வெட்டியதில்  தலை தனியாக, உடல் தனியாகவும் விழுந்துள்ளது. 

தமிழக அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி குறைவு; இது தமிழக மக்களின் சாபக்கேடு - தமிழக பாஜக தலைவர் விமர்சனம்

மேலும் அந்த இளைஞரின் தலையை காலால் எட்டி உதைத்து சாலையில் தள்ளி விட்டு 3 பேர் இரு சக்கர வானத்தில் தப்பி சென்றதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றிய பொன்னேரி காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த இளைஞர் யார்? கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி