தருமபுரி மாவட்டத்தில் கல்லூரி மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள், நண்பர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் சுள்ளான் (வயது 20). அரூர் அருகே இயங்கி வரும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஈட்டியம்பட்டி கூட்ரோடு கிராமத்தை சேர்ந்த பெண்ணும், சுள்ளானும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரை பார்ப்பதற்கு இரவு நேரத்தில் சொந்த கிராமத்தில் இருந்து இளைஞர் சென்றுள்ளார். அப்படி சென்ற இளைஞர் மீண்டும் வரவில்லை. மாறாக பெண்ணின் சொந்த கிராமத்திற்கு முன்பாகவே உள்ள வேப்பம்பட்டி கிராமத்தின் அருகே சாலை ஓரத்தில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இறப்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்த உறவினர்கள் அரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் சுள்ளான் இறப்பிற்கு நீதி வேண்டி கிராம மக்கள், உறவினர்கள் ரவுண்டாணா சாலை சந்திப்பில் சாலையில் உருண்டு மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூரில் இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு கொடூர கொலை; போலீசார் விசாரணை
மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதில் சென்னை, திருவண்ணாமலை, சேலம், பெங்களூர் செல்லக்கூடிய மக்கள், பேருந்து பயணிகள் பாதிக்கப்பட்டனர். தாய், உறவினர்கள் சாலையில் உருண்டு கதறி அழுத காட்சி பார்ப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொலை குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.