உல்லாசத்துக்காக கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி... நேரம் பார்த்து வேலுவை போட்டு தள்ளிய கணவர்..!

Published : Jun 16, 2021, 05:55 PM IST
உல்லாசத்துக்காக கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி... நேரம் பார்த்து வேலுவை போட்டு தள்ளிய கணவர்..!

சுருக்கம்

கொலை செய்யப்பட்ட வேலுக்கும், சுதாகர் மனைவி மணிமேகலைக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த சுதாகர் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

நெல்லையில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம்  கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற துரைசாமி. இவரது மகன் வேல் (31). தொழிலாளியான இவர் மும்பையில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேல் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வேலு வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே,  இந்த கொலை தொடர்பாக 3 பேர் கொண்ட கும்பல் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். 

இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. கொலை செய்யப்பட்ட வேலுக்கும், சுதாகர் மனைவி மணிமேகலைக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த சுதாகர் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

பின்னர் மணிமேகலை, வேலுடன் மும்பைக்கு சென்று வசித்து வந்தார். இந்நிலையில்தான் வேல் சொந்த ஊருக்கு வந்திருந்ததை அறிந்த சுதாகர் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொைல செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை