காதல் லீலை.. மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பை சூறையாடிய கொடூரன்.. வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்.!

Published : Aug 19, 2021, 02:21 PM IST
காதல் லீலை.. மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பை சூறையாடிய கொடூரன்.. வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்.!

சுருக்கம்

இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அந்த இளம்பெண் முத்துசெல்வனின் செலவிற்காக தனது 3 பவுன் தங்கசங்கிலியையும் கொடுத்துள்ளார். இந்நிலையில் முத்துசெல்வனுக்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால், அந்த இளம்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். 

நாங்குநேரி அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கற்பழித்து ஏமாற்றிய வழக்கில் மின்வாரிய ஊழியரை போலீசார் போச்சோவில் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வன் (24). இவர் அந்தப்பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த இளம்பெண்ணை தனது சகோதரியின் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துள்ளார். விழாவுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு முத்துசெல்வன், யாருக்கும் தெரியாமல் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கம் அடைந்த இளம்பெண்ணை அவர் கற்பழித்துள்ளார். மயக்கம் தெளிந்த இளம்பெண் கதறி அழுதுள்ளார். உடனடியாக முத்துசெல்வன் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். 

இதனால், இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அந்த இளம்பெண் முத்துசெல்வனின் செலவிற்காக தனது 3 பவுன் தங்கசங்கிலியையும் கொடுத்துள்ளார். இந்நிலையில் முத்துசெல்வனுக்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால், அந்த இளம்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். 

இதுகுறித்து அந்த இளம்பெண் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக மின்வாரிய ஊழியர் முத்துசெல்வனை போலீசார் போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!