கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொடூர கொலை... சேலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Aug 18, 2021, 5:33 PM IST
Highlights

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி வீட்டில் தனியாக இருந்த கலியமூர்த்தி அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி, அவரது நண்பர் உள்ளிட்ட மூன்று பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள புத்தூர் விநாயகர் நகர் வடக்குக்காட்டை சேர்ந்தவர் கலியமூர்த்தி (42). சரக்கு வாகனம் வைத்திருந்த அவர் மோட்டார் மெக்கானிக் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஆலயமணி(36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி வீட்டில் தனியாக இருந்த கலியமூர்த்தி அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உயிரிழந்த கலியமூா்த்தியின் மனைவி ஆலயமணிக்கும் (31), கள்ளக்குறிச்சி, ராமச்சந்திரன் நகரைச் சேர்ந்த தேன்குமார் (31) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

 இந்நிலையில், கள்ளக்காதலுக்கு  இடையூறாக இருந்த கலியமூர்த்தியை அவரது மனைவி ஆலயமணி, தேன்குமார் ஆகியோா் 17 வயதான சிறுவன் ஹரிகிருஷ்ணனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சேலம் முதலாம் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

click me!