கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருக்க நகைகளை கொள்ளை …. நிதி நிறுவன பெண் ஊழியரின் பலே விளையாட்டு !!

Published : May 01, 2019, 07:44 AM IST
கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருக்க நகைகளை கொள்ளை ….  நிதி நிறுவன பெண் ஊழியரின் பலே விளையாட்டு !!

சுருக்கம்

கோவையில் உள்ள நிதி நிறுவனம்  ஒன்றில் கள்ளக்காதலனுடன் இணைந்து 812 பவுன் நகைகளை கொள்ளையடித்த பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர். கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட அந்த பெண் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் ரேணுகா மற்றும் திவ்யா என்ற இரண்டு பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமை அன்று 812 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டு போனது. 

முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவன், ரேணுகா, திவ்யா என்ற அந்த  இரு பெண் ஊழியர்களைத் தாக்கி கொள்ளைடியத்து சென்றார்.

.இது தொடர்பாக கொள்ளை நடைபெற்றபோது பணியில் இருந்த ரேணுகா மற்றும் திவ்யா ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். ரேணுகா என்பவர் அப்பகுதியில் உள்ள ஜான் பீட்டர் என்பவரின் மனைவி. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததார். போலீசார் தங்கள் பாணியை காட்டியதும் ரேணுகா உண்மையை ஒப்புக் கொண்டார்.

முகமூடி அணிந்து வந்து கொள்ளையடித்த நபர் தனது கள்ளக் காதலன் சுரேஷ் என்று ரேணுகா ஒப்புக் கொண்டார். இதை அடுத்து அவனைக் கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை மீட்டனர். 

ரேணுகாவையும் கைது செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இருவரிடையே கள்ளக் காதல்  இருப்பதாகவும், சொகுசாக வாழ எண்ணி நகைகளை கொள்ளையடிக்க திட்ட தீட்டியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்