மாணவிகள், இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொடூரம்... தோண்டத் தோண்ட எலும்புக்குவியல்கள்..!

Published : Apr 30, 2019, 05:37 PM IST
மாணவிகள், இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொடூரம்... தோண்டத் தோண்ட எலும்புக்குவியல்கள்..!

சுருக்கம்

பள்ளி மாணவிகள், சிறுமிகள், இளம்பெண்களை உள்ளிட்ட பலரையும் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று கிணற்றில் வீசி மறைத்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.   

பள்ளி மாணவிகள், சிறுமிகள், இளம்பெண்களை உள்ளிட்ட பலரையும் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று கிணற்றில் வீசி மறைத்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். 

தெலங்கானா மாநிலம், யாதகிரி மாவட்டம் ஹாஜிப்பூர் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போனார். இதனை அடுத்து அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த வழக்கை கையில் எடுத்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தம் மாணவியின் கைப்பை பாழடைந்த கிணற்றின் அருகே கண்டெடுக்கப்பட்டது. அங்கு, தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றை ஆய்வு செய்தனர். அங்கு மாயமான சிறுமியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. 

அந்தக் கிணறு இருந்த வீட்டின் உரிமையாளர் சீனிவாசனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஹாஜிபூர் பகுதியில் பேருந்து வசதி இல்லாத‌தால் மாணவிகளை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் சீனிவாசன். அப்படி அந்த மாணவியையும் அழைத்துச் சென்றபோது பலாத்காரம் செய்து உடலை மறைக்க கிணற்றில் வீசியுள்ளார். 

இந்த சம்பவத்திற்கு முன் மோனிஷா என்ற இளம்பெண்ணையும் பலாத்காரம் செய்து உடலை கிணற்றுக்குள் வீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து கிணற்றில் சோதனையிட்டபோது, மேலும் பல எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதேபோல 4 ஆண்டுகளுக்கு முன் 2 இளம்பெண்கள் மாயமான சம்பவத்திலும் சீனிவாசனுக்கு தொடர்பு உள்ளதா? என போலீசார் சீனிவாசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், ஆத்திரமடைந்த ஊர் மக்கள் சீனிவாசன் வீட்டை தீயிட்டு கொளுத்தினர். 

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்