பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை!

Published : Jan 25, 2024, 07:48 AM ISTUpdated : Jan 25, 2024, 11:19 AM IST
பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை!

சுருக்கம்

கடந்த 7 ஆண்டுகளாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. நேற்று வழக்கம்போல் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 

பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கடந்த 7 ஆண்டுகளாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. நேற்று வழக்கம்போல் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவரை கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த கும்பல் திடீரென வழிமறித்தது. இதனையடுத்து மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

இதையும் படிங்க;- TASMAC Liquor Price Hike: குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. மதுபான விலை உயருகிறது? எவ்வளவு தெரியுமா?

இந்த தாக்குதலில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பல்லடம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இதையும் படிங்க;- வேறொருவருடன் கள்ளத்தொடர்பு.. நைசாக மனைவியை கூட்டுட்டு போய் கணவர் என்ன செய்தார் தெரியுமா?

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் இருந்த இடங்களில் சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!