ரௌடி மண்டைவெட்டு மாதவனை மண்டையே இல்லாமல் வெட்டி வீசிய கும்பல்; திருச்சியில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Jan 24, 2024, 1:00 PM IST

திருச்சியில் பிரபல ரௌடி மாதவன் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி திருவானைக்காவல்  நான்கு கால் மண்டபம் எதிரில் உள்ள தீட்ஷிதர் தோப்பில் நேற்றிரவு ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடப்பதாக ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் வந்தது. தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தலை வெட்டப்பட்ட நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஐயா நான் ஏற்கனவே ஊதி போய் தான் இருக்கேன்; இனிமேலும் ஊத முடியாது - காவலரிடம் போதை ஆசாமி அலப்பறை

Tap to resize

Latest Videos

விசாரணையில் வெட்டி கொள்ளப்பட்ட நபர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த பிரபல ரௌடி மாதவன்(வயது 50) என்பதும், இவரை மண்டை வெட்டு மாதவன் என ரவுடிகள் மத்தியில் அழைக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க இன்றே கடைசி நாள் - அமைச்சர் திட்டவட்டம்

இவர்மீது பல்வேறு வழக்குகள் நிழுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கொலையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!