போதை மாத்திரை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய இளைஞர்.. வெறியில் சல்லி சல்லியாய் வெட்டி கூறுபோட்ட 3 பேர் சரண்.!

Published : May 20, 2022, 09:41 AM IST
போதை மாத்திரை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய இளைஞர்.. வெறியில் சல்லி சல்லியாய் வெட்டி கூறுபோட்ட 3 பேர் சரண்.!

சுருக்கம்

போதை மாத்திரை அல்லது பணத்தை திருப்பி கொடு என கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த 3 பேரும், மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து, ராகுலை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

சென்னையில் போதை மாத்திரைகள் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய நபரை சரமாரியாக வெட்டி கொலை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொருக்குப்பேட்டை ஹரிநாராயணபுரத்தை சேர்ந்தவர் ராகுல் (19). இவர், அதே பகுதியில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 15ம் தேதி இவரை சந்தித்த 3 பேர், தங்களுக்கு போதை மாத்திரை வேண்டும் என ரூ.20 ஆயிரத்தை ராகுலிடம் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு போதை மாத்திரை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், அந்த 3 பேரும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால், பணத்தையும் திருப்பி தராமல் ராகுல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனால், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹரிநாராயணபுரத்துக்கு வந்து ராகுலை சந்தித்த அந்த 3 பேரும், போதை மாத்திரை அல்லது பணத்தை திருப்பி கொடு என கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த 3 பேரும், மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து, ராகுலை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் அவரது தலை, முதுகு, கை உள்பட பல இடங்களில் பலத்த வெட்டு காயங்களுடன் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ராகுலை  மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராகுல்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதனிடையே, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட  கவுரிசங்கர் (25),  சரவணன் (20), ரகுமான் (20) ஆகியோர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

PREV
click me!

Recommended Stories

28 வயது ஜிம் மாஸ்டர்.! 42 வயது யோகிதா! எந்நேரமும் ஓயாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு தகவல்!
Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?