பட்டப்பகலில் நடுரோட்டில் பைனான்சியரை போட்டு தள்ளியது இதற்காக தான்.. முக்கிய குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்.!

By vinoth kumarFirst Published May 20, 2022, 7:48 AM IST
Highlights

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் உயிர் பயத்தில் அவர்களிடம் இருந்து தப்பிக்க வண்டியை அங்கேயே போட்டு விட்டு சாலையில் ஓடினார். ஆனால், மர்ம கும்பல் ஆறுமுகத்தை விடாமல் பட்டப்பகலில் நடுரோட்டில் விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது. இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். 

சென்னையில் பட்டப்பகலில் பைனான்சியரை 6 பேர் கொண்ட கும்பலால் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சென்னை சேத்துப்பட்டு, வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (36). பைனான்சியர் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் அண்ணாநகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு ஆறுமுகம் அவரது நண்பர்  ரமேஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனர். அமைந்தகரை அடுத்த செனாய் நகர் அருகே வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர்.

இதையும் படிக்க;- உல்லாசமாக இருக்க பணத்தை தண்ணியாக இறைத்த பெண்.. திருப்பி கேட்டதால் படுகொலை செய்த கள்ளக்காதலன்?

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் உயிர் பயத்தில் அவர்களிடம் இருந்து தப்பிக்க வண்டியை அங்கேயே போட்டு விட்டு சாலையில் ஓடினார். ஆனால், மர்ம கும்பல் ஆறுமுகத்தை விடாமல் பட்டப்பகலில் நடுரோட்டில் விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது. இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். 

பின்னர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ஆறுமுகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி  சந்திரசேகர் (28), தொழில் போட்டி காரணமாக ஆறுமுகத்தை கொன்றது தெரியவந்தது. இவர், கடந்த 2018 மற்றும் 2021ம் ஆண்டில் ஆறுமுகத்தை கொலை செய்ய முயன்றதும், இவர் மீது 2 கொலை, 2 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.

இதையடுத்து 6 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் மற்றும் அவனது கூட்டாளியான அதே பகுதியை சேர்ந்த ரவுடி ரோஹித்ராஜ் (25) ஆகியோர் நேற்று மாலை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க;- அழகிகளை வைத்து ஹைடெக் விபச்சாரம்.. ஒரு மணிநேரத்திற்கு 20 ஆயிரம் முதல் 30 லட்சம் வரை.. கோடிகளில் புரண்ட பிஸ்னஸ்

click me!