போதை மாத்திரை வாங்கி விற்கும் வியாபாரம்.. வாலிபரை நடு ரோட்டில் கொத்துக்கறி போட்ட கும்பல்.

Published : May 19, 2022, 03:57 PM IST
 போதை மாத்திரை வாங்கி விற்கும் வியாபாரம்..  வாலிபரை நடு ரோட்டில் கொத்துக்கறி போட்ட கும்பல்.

சுருக்கம்

போதை மாத்திரை கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையில் இந்த கொடூரம் நடந்துள்ளது.  

போதை மாத்திரை கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையில் இந்த கொடூரம் நடந்துள்ளது. தமிழகத்தில் போதை மாத்திரை கஞ்சா  போன்ற போதை வஸ்துக்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, சமீபத்தில் தமிழகம் முழுவதும் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை போலீசார் அதிரடி வேட்டை நடத்தி கைது செய்தனர். இந்நிலையில் போதை மாத்திரை வாங்கி விற்பனை செய்யும் விவகாரத்தில் இளைஞர்  வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொருக்குப்பேட்டை ஹரி நாராயண புரத்தை சேர்ந்தவர் ராகுல் (19) இவர் அப்பகுதியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி போதை மாத்திரை வேண்டும் என மூன்று பேர் ராகுலிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் மாத்திரை வாங்கிக் கொடுக்காமல் ராகுல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் ராகுல் இழுத்தடிப்பு செய்து வந்தார். இந்நிலையில் மூன்று பேரும் ராகுலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு ஆதி நாராயணபுரம் சென்று  மீண்டும் போதை மாத்திரை கேட்டுள்ளனர். அவர்கள் கொடுக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் ராகுலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதுகு கை கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். அதில் ராகுல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்போது அந்த வழியாக வந்த நண்பர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். ராகு தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆர்கே நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அதில் ராகுலை கொலை செய்ததாக கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரைச் சேர்ந்த சங்கர் என்கின்ற கௌரிசங்கர் (25) தண்டையார்பேட்டை கைலாசம் தெருவைச் சேர்ந்த சரவணன் வயது (20) வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரியை சேர்ந்த ரகுமான் (20) ஆகிய  3 பேரும் போலீசில் சரணடைந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ராகுல் போதை மாத்திரை தருவதாக கூறி 20 ஆயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு அதை திருப்பித் தர மறுத்ததால் கொலை செய்ததாக கூறினார். இந்நிலையில் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!