சிகரெட் தர மறுத்ததால் நடந்த கொலை... மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Published : Jul 21, 2021, 06:31 PM IST
சிகரெட் தர மறுத்ததால் நடந்த கொலை... மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

சுருக்கம்

கடனுக்கு சிகரெட் தர மறுத்த கடைக்காரரை கொலை செய்த சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

சொத்துக்காக மட்டுமல்ல. ஒரு பீடிக்காவும் கொலை நடந்திருக்கிறது. இப்போது மதுரையில் கடனுக்கு சிகரெட் தர மறுத்ததால் கடையின் உரிமையாளரை மூன்று இளைஞர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், சமத்துவபுரத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் வினோத். அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி, கார்த்திக், ஜோதிமணி ஆகிய மூன்று இளைஞர்கள் வினோத்தின் கடைக்கு வந்துள்ளனர். அங்கே வந்த அவர்கள் கடைக்காரரான வினோத்திடம் கடனுக்கு சிகரெட் கேட்டுள்ளனர். ஏற்கனவே இந்த இளைஞர்கள் கடையில் கடன் பாக்கி வைத்துள்ளதால், வினோத் கடனாக சிகரெட் தர முடியாது என கறாராக மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் வினோத்தை கடுமையாகத் தாக்கினர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து தடுப்பதிற்குள் அவர்கள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பலத்த காயமடைந்திருந்த வினோத்தை அருகே இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

பின்னர், இதுபற்றி தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலிஸார் விசாரணை நடத்தி வினோத்தை தாக்கிய மூன்று இளைஞர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடனுக்கு சிகரெட் தர மறுத்த கடைக்காரரை கொலை செய்த சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

பேருந்தில் இவ்வளவு பேர் இருக்கும் போதே ஸ்ரீதர் செய்த வேலை.. கண்ட இடத்தில் கை வைத்ததால் பதறிய பள்ளி மாணவி
தனியாக செல்லும் பொண்ணுங்க தான் டார்கெட்.. தொடக்கூடாத இடத்தில் தொட்டு சிக்கிய 27 வயது இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி