15 வயது சிறுமியை வீட்டுக்குள் வைத்து 2 நாட்களாக கூட்டு பலாத்காரம்.. 46 வயது காமக்கொடூரன் கைது..!

Published : Jul 21, 2021, 05:27 PM IST
15 வயது சிறுமியை வீட்டுக்குள் வைத்து 2 நாட்களாக கூட்டு பலாத்காரம்.. 46 வயது காமக்கொடூரன் கைது..!

சுருக்கம்

தனியார் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வரும்  கே.கே.நகரை சேர்ந்த புருஷோத்தமன் (46) என்பவரிடம் மகளை பார்த்து கொள்ளும் படி கூறிவிட்டு சென்றோம். ஆனால், அவர் 2 நாட்களாக எனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை மிரட்டி வீட்டுக்குள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராணி (38). இவர் நேற்று கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், எனது கணவருடன் 2 நாள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது, வீட்டில் 15 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், வீட்டின் அருகே தனியார் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வரும்  கே.கே.நகரை சேர்ந்த புருஷோத்தமன் (46) என்பவரிடம் மகளை பார்த்து கொள்ளும் படி கூறிவிட்டு சென்றோம். ஆனால், அவர் 2 நாட்களாக எனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், எனது மகள் உடல் ரீதியாக பாதிக்கபட்டிருக்கிறாள். எனவே எனது மகளை சீரழித்த வங்கி காவலாளி மீது கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்படி போலீசார் விசாரணை நடத்தி தனியார் வங்கி காவலாளி புஷோத்தமன் மற்றும் அவரது நண்பர் ஜனா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

தாய் தந்தையைக் கொன்று ரம்பத்தால் துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்!
பேருந்தில் இவ்வளவு பேர் இருக்கும் போதே ஸ்ரீதர் செய்த வேலை.. கண்ட இடத்தில் கை வைத்ததால் பதறிய பள்ளி மாணவி