பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்.. கெத்து காட்ட முயன்றவர்களுக்கு லாடம் கட்டிய போலீஸ்..!

By vinoth kumarFirst Published Jul 21, 2021, 3:01 PM IST
Highlights

சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்தி வாண வேடிக்கையுடன் பெரிய கேக் ஒன்றை வெட்டியுள்ளனர். பரந்தாமனுக்கு ஆளு உயர மாலை அணிவித்து தலையில் கிரூடம் மாட்டி, பித்தலையால் ஆன பெரிய பட்டா கத்தி ஒன்றை கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 

சென்னை மயிலாப்பூர் சாலையின் நடுவே பட்டாசு வாண வேடிக்கையுடன் பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சமீப காலமாக பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி கத்தி வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுபவர்களை போலீசும் கைது செய்து வருகிறது. ஆனால், இந்த கத்தி கேக் கலாச்சாரம் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. 

இந்நிலையில், சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்த பரந்தாமன் ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லூரி பயின்று வருகிறார். கடந்த திங்களன்று  பரந்தாமனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை அவரது நண்பர்கள் மயிலாப்பூர் கைலாசபுரம் பகுதியில் கொண்டாடினர். சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்தி வாண வேடிக்கையுடன் பெரிய கேக் ஒன்றை வெட்டியுள்ளனர். பரந்தாமனுக்கு ஆளு உயர மாலை அணிவித்து தலையில் கிரூடம் மாட்டி, பித்தலையால் ஆன பெரிய பட்டா கத்தி ஒன்றை கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 

இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் நண்பர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த கேக் வெட்டும் வீடியோ மயிலாப்பூர் துணை ஆணையர் பார்வைக்கு வந்துள்ளது. இதனையடுத்து, எந்த பகுதியில் நடந்தது என்பது விசாரணை நடத்தினர். உடனடியாக இந்த கும்பலை கைது செய்ய மயிலாப்பூர் துணை ஆணையர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் பட்டா கத்தியால் கேக் வெட்டி  பரந்தாமன், நவீன், கோபி, அஜித், பிரவீன், நிஷாந்த் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

மயிலாப்பூர் பகுதியில் கோலோச்சிய பிரபல ரவுடி சிவா என்னும் சிவக்குமார் சில மாதங்களுக்கு முன்பு கூலிப்படையினரால் வெட்டிக்கொல்லப்பட்டார். ரவுடி சிவா இடத்திற்கு நான் தான் என பரந்தாமன் தனது கூட்டாளிகளை சேர்த்து கொண்டு அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஏரியாவில் கெத்து காட்டவே பட்டசு, பட்டாகத்தியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பரந்தாமன் உட்பட 6 அபர் மீது ஆயுதம் வைத்து வன்முறை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 

click me!