நடிகைகளின் ஆபாச வீடியோக்கள்... நாளொன்றுக்கு ரூ.6-8 லட்சம் வரை சம்பாதித்த நடிகையின் கணவர்..!

Published : Jul 21, 2021, 01:13 PM IST
நடிகைகளின் ஆபாச வீடியோக்கள்... நாளொன்றுக்கு ரூ.6-8 லட்சம் வரை சம்பாதித்த நடிகையின் கணவர்..!

சுருக்கம்

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட அண்ணி பிரதீப் பக்ஷியின் கென்ரின் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து அந்த செயலியை நடத்தி வந்துள்ளார் ராஜ் குந்த்ரா. 

பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டியில் கணவரும் லண்டன் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோக்களை செயலி மூலம் வெளியிட்டு தினமும் ரூ .6-8 லட்சம் சம்பாதித்துள்ளது தெரிய வந்துள்ளது. 


  
சில நாட்களுக்கு முன்பு, ஆபாச வீடியோ மோசடி வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபர் ராஜ் குந்த்ராவும் கைது செய்யப்பட்டார். 18 மாதங்களுக்கு முன்னர் அவர் சில செயலிகளை உருவாக்கி அதன் மூலம் வெப்சீரீஸில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை பயன்படுத்தி ஆபாச படங்களை எடுத்துள்ளார். அதனை இங்கிலாந்தை தளமாகக் கொண்ட அண்ணி பிரதீப் பக்ஷியின் கென்ரின் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து அந்த செயலியை நடத்தி வந்துள்ளார் ராஜ் குந்த்ரா. 

இந்தியாவில் உருவாக்கப்பட்ட அந்த ஆபாச வீடியோக்களை ஹாட்ஷாட் என்ற செயலியில் பதிவேற்ற முடியாது என்பதால், அவர் வெட்ரான்ஸ்ஃபர் வழியாக அனுப்பி இங்கிலாந்தில் இருந்து பதிவேற்றம் செய்துள்ளனர். அனைத்து வீடியோகளும் ராஜ்குந்த்ராவின் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டு லண்டனை தளமாகக் கொண்ட அவரது மைத்துனர் பிரதீப் பக்ஷிக்கு சொந்தமான கென்ரின் லிமிடெட் என்று அழைக்கப்படும் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக 250000 டாலர்களுக்கு விற்கப்பட்டது போன்று ராஜ்குந்த்ரா கணக்கு காட்டியுள்ளார். அந்த வீடியோக்களை ஹாட்ஷாட் என்ற செயலியிலும் பதிவேற்றி வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்துள்ளனர். மும்பை காவல்துறையினர் பல ஹாட்ஷாட் படங்கள், வீடியோ கிளிப்புகள், வாட்ஸ்அப் அரட்டைகள் போன்றவைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

இதன் மூலம் தினந்தோறும் சராசரியாக ராஜ் குந்த்ரா ஆரம்பத்தில் ரூ. 2-3 லட்சம் வரை சம்பாதித்துள்ளார். பின்னர் அது 6-8 லட்சம் வரை அதிகரித்துள்ளது.  தற்போது வரை பல்வேறு கணக்குகளில் ரூ .7.5 கோடியை முடக்கியுள்ளது காவல்துறை. நாடு முழுவதிலுமிருந்து ஆர்வமுள்ள நடிகைகள் ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ப்ரைன்வாஷ் செய்து முதலில்அரை நிர்வாணமாகவும் பின்னர் முழு நிர்வாண படம் பிடித்துள்ளனர். அவர்களில் சிலர் இதை கடுமையாக எதிர்த்துள்ளனர். அந்த நடிகைகளே புகார்களும் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

இரவு 9 மணி.. ஹோட்டலில் துப்பாக்கி சுடும் வீராங்கனை கதறல்.. நடந்தது என்ன? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்
லவ் பண்றேன்னு சொல்லி இப்படி என்னை ஏமாத்திட்டியே! ப்ளீஸ் என்ன விட்டுடு! கதறியும் விடாமல் நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்.!