மாமியாரை உல்லாசத்து அழைத்த மருமகன்.. மச்சினிச்சிக்கு பாலியல் தொல்லை.. மகளின் தாலியை தாயே அறுத்த கொடூரம்..!

Published : Jan 21, 2021, 12:38 PM IST
மாமியாரை உல்லாசத்து அழைத்த மருமகன்.. மச்சினிச்சிக்கு பாலியல் தொல்லை.. மகளின் தாலியை தாயே அறுத்த கொடூரம்..!

சுருக்கம்

ஆவடி அருகே மருமகன் கொலை வழக்கில் ஒரு வருடம் கழித்து அவரது மாமியாரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆவடி அருகே மருமகன் கொலை வழக்கில் ஒரு வருடம் கழித்து அவரது மாமியாரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை  திருவல்லிக்கேணி, அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (26), பெயின்டர். இவரது சொந்த ஊர் மதுரை. இவர், மீது சென்னை மற்றும் மதுரையில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2019 அக்டோபர் 10ம் தேதி ஆவடி அடுத்த காட்டூர், அந்தோணி நகரில் உள்ள காலி மைதானத்தில் பிரகாஷை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக மாதவரம், ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த  கார்த்திக் (26) மற்றும் அவரது கூட்டாளிகள் பெரம்பூர், சத்தியபாமா தெருவை சேர்ந்த அரவிந்த்  (18), குமார் (30) ஆகிய மூவரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர். கைதான 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது, பிரகாஷ் தனது மாமியார் மற்றும் மைத்துனிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், அதனால் பிரகாஷின் 40 வயதான மாமியாரின் தூண்டுதலின் பேரில் 3 பேரும் சேர்ந்து பிரகாசை கொள்ளுமேடு பகுதிக்கு அழைத்துச்சென்று கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

அதன்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தனக்கும், இளைய மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர்கள் 3 பேர் மூலம் மருமகன் பிரகாசை கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து கொலை சம்பவம் நடந்து ஒரு வருடத்துக்கு பிறகு பிரகாசின் மாமியாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்