மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள ஒரு ஸ்பாவில் நேற்று முன் தினம் ஹிஸ்டரி ஷீட்டர் குரு வாக்மரே என்ற நபர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்..
மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள ஒரு ஸ்பாவில் நேற்று முன் தினம் ஹிஸ்டரி ஷீட்டர் குரு வாக்மரே என்ற நபர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்..
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஸ்பா உரிமையாளரான சந்தோஷ் ஷெரேகரும் ஒருவர். தனக்கு தீங்கு விளைவிக்கும் 22 பேரின் பெயர்களை அவர் உடலில் பச்சை குத்திக் கொண்டதாகவும், அந்த பெயரில் ஸ்பா உரிமையாளரின் பெயரும் இருந்துள்ளது. அவரை மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
undefined
உயிரிழந்த 48 வயதான குரு, தகவல் அறியும் உரிமை ஆர்வலர் என்று கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு எதிராக பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை மத்திய மும்பையின் வோர்லியில் உள்ள சாஃப்ட் டச் ஸ்பாவில் அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் மீட்கப்பட்டு உடற் கூராய்வு செய்யப்பட்ட நிலையில், அவர் தனது தொடைகளில் எதிரிகளின் பெயர்களை பச்சை குத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்பா உரிமையாளர் சந்தோஷை குரு தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், இதனால் அவரை கொல்ல கூலிப்படையினரை அவர் ஏவியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. குருவைக் கொல்வதற்காக மற்றொரு ஸ்பா உரிமையாளரான முகமது பெரோஸ் அன்சாரி (26) என்பவரிடம் அவர் ரூ.6 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அன்சாரி மும்பை அருகே நல்லசோபராவில் ஸ்பா நடத்தி வந்தார். ஆனால் அந்த ஸ்பா கடந்த ஆண்டு ரெய்டு காரணமாக மூடப்பட்டது. குரு அளித்த புகாரின் பேரில் தான் அன்சாரியின் ஸ்பாவில் சோதனை நடத்தப்பட்டது. குரு இதுபோன்ற புகார்களை பதிவு செய்வதையும், ஸ்பா உரிமையாளர்களிடம் பணம் பறிப்பதையும் தடுக்கக் கோரி அன்சாரி சந்தோஷை அணுகி உள்ளார்.
சீனியர், ஜூனியர் பாரபட்சம் கிடையாது; 6 மாணவிகளை ஏமாற்றி பாலியல் தொல்லை - பிளே பாய் அதிரடி கைது
அப்போது குருவை கொல்ல வேண்டும் சந்தோஷ் அன்சாரிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து டெல்லியைச் சேர்ந்த சாகிப் அன்சாரியைத் தொடர்பு கொண்டு அன்சாரி மூன்று மாதங்களுக்கு முன்பு குருவை கொல்ல சதித்திட்டத்தை தீட்டினார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. குருவின் வழக்கமான செயல்பாடுகளை மூன்று மாதங்கள் கவனித்த கூலிப்படையினர் அவரை சந்தோஷின் ஸ்பாவில் வைத்து கொல்ல திட்டமிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி புதன்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் குருவை தூக்கிய கும்பல் ரூ. 7,000 மதிப்புள்ள புதிய கத்திகளைப் பயன்படுத்தி அவரைக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. அடுத்த நாள் காலை 9:30 மணியளவில் தான் இந்த கொலை பற்றி அறிந்ததாக கூறிய குருவின் காதலி, பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார், இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சந்தோஷை விசாரித்த நிலையில் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், குருவின் கொலையில் அவரது காதலியின் பங்கு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு முதல் மும்பை, நவி மும்பை, தானே மற்றும் பால்கர் ஆகிய இடங்களில் உள்ள ஸ்பா உரிமையாளர்களிடம் இருந்து குரு பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. குரு மீது மிரட்டி பணம் பறித்தல், கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.