மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.. என்ன நடந்தது..?

Published : Sep 25, 2022, 12:12 PM ISTUpdated : Sep 25, 2022, 12:14 PM IST
மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.. என்ன நடந்தது..?

சுருக்கம்

மும்பையில் 24 வயதாகும் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரேயாசி பட்கர். இவருக்கு வயது 24. இவர் மும்பையிலுள்ள நாயர் மருத்துவக் கல்லூரியில் ஆக்குபேஷனல் தெரபி படித்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த வியாழக்கிமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வீடு திரும்பிய பெற்றோர்கள், தூக்கில் தொங்கிய மகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க:தந்தையுடன் காணாமல் போன மகள்.. 20 நாட்கள் கழித்து தாய்க்கு கிடைத்த அதிர்ச்சி தகவல் !

பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அக்ரிபாதா போலீசார் விபத்து மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர். படிப்புச்சுமை மற்றும் உடல்நலப் பாதிப்பு ஆகியவற்றின் அழுத்தத்தினால் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க:பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகள் கைது..! தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் டிஜிபி எச்சரிக்கை

PREV
click me!

Recommended Stories

காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது