சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி கைலாசநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபி (40). கார், ஆட்டோ வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கோபிக்கும் கொரட்டூர் காமராஜர் நகர் 9வது தெருவில் வசிக்கும் ராணி(40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் ராணியின் கணவர் உயிரிழந்துவிட்டார்.
மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கார் விற்பனையாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி கைலாசநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபி (40). கார், ஆட்டோ வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கோபிக்கும் கொரட்டூர் காமராஜர் நகர் 9வது தெருவில் வசிக்கும் ராணி(40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் ராணியின் கணவர் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், ராணியின் கணவர் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். மேலும், கோபியுடன் ராணிக்கு இருந்த கள்ளத்தொடர்பு அவரது மருமகன் நந்தகுமார் (22) என்பவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, மாமியாருடன் இருக்கும் கள்ளத்தொடர்வை கைவிடுமாறு நந்தகுமார் பலமுறை கோபியை கண்டித்துள்ளார். ஆனாலும், இவர்களது கள்ளதொடர்பை தொடர்ந்தது.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி இரவு ராணி வீட்டிற்கு கோபி வந்துள்ளார். இதனை தெரிந்து, அங்கு நந்தகுமார் வந்துள்ளார். பின்னர், கோபிக்கும் நந்தகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த நந்தகுமார், கோபியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கோபி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாமியாருடன் இருந்த கள்ளத்தொடர்பை கைவிடாததால் கார் விற்பனையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.