சிறையில் தவிக்கும் மகன்... ஷாருக்கான் எடுத்த அதிரடி முடிவு... ரசிகர்கள் ஷாக்..!

Published : Oct 22, 2021, 12:05 PM IST
சிறையில் தவிக்கும் மகன்... ஷாருக்கான் எடுத்த அதிரடி முடிவு... ரசிகர்கள் ஷாக்..!

சுருக்கம்

வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுக்காக நீதிமன்றத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என்று அதிகாரிகள் ஷாருக்கிடம் தெரிவித்தனர்.

மகன் ஆர்யன் கானுக்கு வீட்டு உணவு கொடுக்கலாமா என்று ஷாருக்கான் சிறை அதிகாரிகளிடம் கேட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது மகன் ஆர்யன் கானை பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் நேற்று காலை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை சந்தித்தார். அவர் சிறை வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு அவரது ஆதார் கார்டு சரிபார்க்கப்பட்டது.

ஷாருக்கான், ஆரியனிடம் சரியாக சாப்பிடுகிறாயா? என்று கேட்டதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் ஷாருக்கான், ஆரியனுக்கு வீட்டில் சமைத்த உணவு கொடுக்கலாமா? என்று உள்ளே இருந்த சிறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். இருப்பினும், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுக்காக நீதிமன்றத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என்று அதிகாரிகள் ஷாருக்கிடம் தெரிவித்தனர்.

23 வயதான ஆர்யன், போதை மருந்து வழக்கில் அக்டோபர் 3 ம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) மும்பையில் இருந்து கோவா செல்லும் கப்பலில் ஏழு பேருடன் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஆரியன் மற்றும் இரண்டு பேருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த ஆண்டு தனது பிறந்தநாள் மற்றும் தீபாவளி கொண்டாட்டங்களை கைவிட திட்டமிட்டுள்ளதாகவும், ஆரியன் கானுக்கு சில காலத்திற்கு ஜாமீன் கிடைக்காது என அவர்கள் கருதுகின்றனர். ஆரியன் கைது செய்யப்பட்டதில் இருந்து ஊடகங்களின் கண்ணை விட்டு விலகி இருந்த ஷாருக், இந்த ஆண்டு தனது வீட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தனது ரசிகர்களை கேட்டுக்கொள்வார் என்று கூறுகிறார்கள். 
 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி