கோவையில் பயங்கரம்…. மூன்று மாத பேரக் குழந்தையை கொலை செய்துவிட்டு தப்பியோடிய பாட்டி…!

Published : Oct 22, 2021, 10:15 AM IST
கோவையில் பயங்கரம்…. மூன்று மாத பேரக் குழந்தையை கொலை செய்துவிட்டு தப்பியோடிய பாட்டி…!

சுருக்கம்

ஐஸ்வர்யா கடைக்கு சென்ற தருணத்தில் அவரது தாயர் இரண்டு குழந்தைகளையும் கொடூரமாக தாக்கியுள்ளார். அதில் மூன்று மாத ஆண் குழந்தை இறந்துவிட்டது.

ஐஸ்வர்யா கடைக்கு சென்ற தருணத்தில் அவரது தாயர் இரண்டு குழந்தைகளையும் கொடூரமாக தாக்கியுள்ளார். அதில் மூன்று மாத ஆண் குழந்தை இறந்துவிட்டது.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சேரன் நகரைச் சேர்ந்தார் பாஸ்கரன். இவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தை பிறந்தது. ஒரு ஆண், ஒரு பெண் என அழகிய குழந்தைகளோடு குடும்பம் நடத்தி வந்த தம்பதிக்கு ஐஸ்வர்யாவின் தாயார் ரூபத்தில் எமனே வந்திருக்கிறார்.

இரண்டு குழந்தைகளையும் ஐஸ்வர்யாவால் பார்த்துக்கொள்ள முடியாததால் மதுரையில் இருந்து அவரது தாயாரை வரவழைத்துள்ளனர். மதுரையில் இருந்து கோவை வந்த ஐஸ்வர்யாவின் தாயார் சாவித்திரி, கடந்த இரண்டு மாதங்களாக பேரக் குழந்தைகளை பராமரித்துவந்துள்ளார். குழந்தைகளை சாவித்திரி கண்ணும் கருத்துமாக கவணித்துவருவதாக பாஸ்கரனும், அவரது மனைவியும் நபியுள்ளனர்.

இந்தநிலையில், நேற்றிரவு பாஸ்கரன் வெளியே சென்றுவிட்டார். ஐஸ்வர்யாவும் பொருட்களை வாங்க கடைக்கு சென்றுள்ளார். இந்த நேரம் பார்த்து பிறந்து மூன்று மாதங்களே ஆண தமது பேரக்குழந்தையை சாவித்திரி அடித்தே கொலை செய்துள்ளார். மூன்று மாத பெண் குழந்தையையும் சாவித்திரி கொடூரமாக தாக்கியிருக்கிறார். ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்று பார்த்தபோது ஆண் குழந்தை சடலமாகவும், பெண் குழந்தை படுகாயங்களுடனும் கிடந்துள்ளனர். பேரக் குழந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய சாவித்திரியை துடியலூர் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!