தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சேலூர் வனப்பகுதியில் கடந்த 15ம் தேதி கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ரவுடியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில் தந்தை மகன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சேலூர் வனப்பகுதியில் கடந்த 15ம் தேதி கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சடலமாக கிடந்தது சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்த பாபுராஜ்(40) என்பது தெரியவந்தது. இவர் மீது காரியப்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு இருந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கொலையில் தொடர்புடைய விஜயகுமார்(40) அவரது மகன் விக்னேஷ்(20) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து, இருவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கைதான விஜயகுமார் அருள்வாக்கு கூறி வந்து உள்ளார். அவருக்கும் அரூர் வேலனூரைச் சேர்ந்த உறவுக்கார பெண் தீர்த்தம்மாள் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பெயிண்டிங் வேலைக்கு சென்ற போது சில மாதங்களுக்கு முன்பு பாபுராஜிக்கும் தீர்த்தம்மாளுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விஜயகுமார் தொடர்பை கைவிடுமாறு பாபுராஜிடம் கூறியுள்ளார்.
அப்போது நான் ரவுடி ஏற்கனவே கொலை செய்துள்ளேன் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த விஜயகுமார் சம்பவத்தன்று பாபுராஜ் வரவழைத்து அதிக அளவில் மது அருந்த வைத்துள்ளனர். பின்னர் அவரை கொலை செய்துள்ளனர். அந்த தடயங்களை அழிக்க அவரது மகன் விக்னேஷ் உதவி செய்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.