
மும்பை போதைப்பொருள் ஒழிப்பு வழக்கு தொடர்பாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, நடிகர் சங்கி பாண்டேவின் மகள். அனன்யா ஷாருக்கான் மகள் சுஹானா கானின் நண்பர்களின் குழுவில் ஒருவராக இருக்கிறார். அதே நேரத்தில் அவரது தாயார் பாவனா பாண்டேவும் ஷாருக்கான் மனைவி கவுரி கானின் நெருங்கிய நண்பர்.
அனன்யாவும், சுஹானா கானும் குழந்தை பருவத்தில் இருந்தே நண்பர்களாக இருந்து வருகின்றனர். அவர்களது சமூக ஊடக சுயவிவரத்தைப் பார்த்தால் அவர்கள் நெருங்கி இருக்கும் புகைப்படங்களை காணலாம். அனன்யாவும், சுஹானாவும் அடிக்கடி ஒன்றாக பார்ட்டிக்கு சென்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்கள். ஆர்யன் கான் கூட அவர்களுடன் எப்போதாவது சந்திப்பது வழக்கம்.
2019 ஆம் ஆண்டில், எஸ்ஆர்கேவின் குழந்தைகள் சுஹானா கான், ஆரியன் கான் மற்றும் அப்ராம் கான் ஆகியோர் ஆண்டின் கடைசி வார இறுதி நாட்களை அலிபாகில் உள்ள பண்ணை வீட்டில் கொண்டாடினர். இந்த மூவருடன் அனன்யா பாண்டே உட்பட அவர்களின் நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டனர். சுஹானாவின் உறவினர் ஆலியா சிபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.