மருமகளின் தலையை தனியாக துண்டித்த மாமியார்.. நந்தினி மீது எதுக்கு இவ்வளவு கோபம்.! பரபரப்பு தகவல்!

Published : Jan 03, 2026, 11:40 AM IST
Kallakurichi

சுருக்கம்

கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போனதாக தேடப்பட்ட நந்தினி என்ற பெண், அவரது மாமியாராலேயே தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மகனின் இரண்டாவது திருமணத்தால் ஆத்திரத்தில் இருந்த மாமியார் திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள வளையம்பட்டை கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி. இவர் விரியூரை சேர்ந்த மருத்துவர் ரொசாரியாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு விரியூரில் கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நந்தினி கடந்த இரண்டு நாட்களாக திடீரென மாயமானார். இதனையடுத்து மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல் சங்கராபுரம் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடைசியாக தனது மனைவியை தாய் கிறிஸ்துவமேரி அழைத்து சென்றதாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

இந்த தகவலின் அடிப்படையில் கிறிஸ்துவமேரியை காவல் நிலையம் அழைத்து வந்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், தனது தோழியுடன் சேர்ந்து தனது மகள் நந்தினியின் தலையை துண்டித்து கொலை செய்ததாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தலையை ஒரு இடத்திலும், மற்ற உடல் பாகங்களை மற்றொரு இடத்தில் புதைத்ததாக தெரிவித்தார்.

மேலும் மகனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறினார். 3 மாதங்களாக திட்டமிட்டு இக்கொடூர செயலை செய்துளார். கொலை நடந்த இடத்தில் தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருமகளின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருமகளை மாமியார் தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

4 மாதங்களாக வலியால் துடித்த 14 வயது சிறுவன்.! விடாத இரண்டு காமக்கொடூரன்கள்.! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
மூன்று குழந்தைகளை பெத்த பிறகும் கருணாகரனுக்கு வந்த சந்தேகம்.. கண்ணெதிரே துடிதுடித்த கலையரசி! காலையில் பக்கா நாடகம்!