இந்த விவகாரம் நாளடைவில் மகனுக்கு தெரியவந்ததையடுத்து கள்ளக்காதலை கைவிடுமாறு தனது தாயைக் கண்டித்துள்ளார். ஆனால், நீலம்மா அவரது பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அனில்குமாருடனான கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார்.
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தாயுடன் கள்ளக்காதலை தொடர்ந்து வந்த இளைஞரை கொடூரமாக கத்தியால் குத்திய மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் உள்ள ஜகத்கிரி குட்டா பகுதியில் வெமூலா நீலம்மா(38). இவர் பெருநகர மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ரீராம் (19) என்ற மகன் உள்ளார். அந்த பெண் தன்னுடன் பணிபுரியும் அனில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க;- அண்ணன் வெளிநாட்டுக்கு சென்ற கேப்பில் அண்ணியை கரெக்ட் செய்த கொழுந்தன்.. ஏற்காட்டு ரூமில் நடந்த ஏடாகுடம்.!
இந்த விவகாரம் நாளடைவில் மகனுக்கு தெரியவந்ததையடுத்து கள்ளக்காதலை கைவிடுமாறு தனது தாயைக் கண்டித்துள்ளார். ஆனால், நீலம்மா அவரது பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அனில்குமாருடனான கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார்.
இதனால், மிகுந்த ஆத்திரமடைந்த ஸ்ரீராம் அனில்குமாரின் செல்போன் எண்ணை கைப்பற்றி அவரிடம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, நேரில் பேச வேண்டும் என்று மறைவான இடத்திற்கு வரழைத்துள்ளார். அங்கு, அனில்குமாரிடம் தனது தாயுடனான கள்ளத்தொடர்வை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனாலும், அனில்குமார் ஸ்ரீராமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- உன் அண்ணனுக்கு நடந்ததுதான் உனக்கும்.. மிரட்டிய பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு தம்பி செய்த காரியம்.!
இதனால், ஆத்திரமடைந்த ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் அனில்குமாரை கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது, ஸ்ரீராம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அனில்குமாரை சரமாரியாக குத்தினார். இதனையடுத்து, ஒருவழியாக அவர்களிடம் தப்பித்து பிரதான சாலைக்கு ரத்த காயங்களுடன் ஓடிவந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- குழந்தையை கொஞ்சுவது போல் அம்மாவை கரெக்ட் செய்து உல்லாசம்.. பக்கத்து வீட்டுக்காரனுக்காக பெண் செய்த பகீர் செயல்