கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய் !! அறைக்குள் வைத்துப் பூட்டி அம்பலப்படுத்திய மாணவி !!

Published : Aug 05, 2019, 09:06 PM IST
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய் !! அறைக்குள் வைத்துப் பூட்டி அம்பலப்படுத்திய மாணவி !!

சுருக்கம்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கள்ளக் காதலனுடன் வீட்டுக்குள் உல்லாசமாக இருந்த தாயை  பள்ளி மாணவி அறைக்குள் வைத்து பூட்டி அனைவருக்கும் அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த  சுகுமாரி. 40 நெல்லையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவரது கணவர்  வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்..

ஆசிரியையின் தம்பியின் நண்பரான குமரி மாவட்டம் நாகர்கோவில் பழவிளையை சேர்ந்த கண்ணன் என்பவர் அடிக்கடி ஆசிரியை வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு ஆசிரியையுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஆசிரியை சுகுமாரிக்கு  15 வயதில் 10-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். 

இந்தநிலையில் நேற்று மாலை மகள் வீட்டில் இருந்த போதே ஒரு அறையில் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு  கண்ணனும், சுகுமாரியும் உல்லாசமாக இருந்துள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியையின் மகள் இருவரையும் அறைக்குள் வைத்து பூட்டினார். பின்பு அதுகுறித்து தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு திரண்டு வந்த உறவினர்கள், ஆசிரியையுடன் தங்கியிருந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கி தர்ம அடி கொடுத்தனர். பின்பு அந்த வாலிபரை மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு வந்த ஆசிரியை, கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் என அடம் பிடித்தார். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றார். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் ஆசிரியையிடம் விசாரித்த போது அவர் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை கூறினார்.

அதில், எனது தாய்க்கும், என்னுடைய கணவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அதன் காரணமாக என்னை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் கணவருடன் வாழ எனக்கு விருப்பமில்லை. அதனால் கடந்த 10 வருடமாக வாலிபருடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்தேன் என கூறி அதிரவைத்தார்.
.

வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் உறவினர்கள் யாராவது புகார் அளிக்க வேண்டும். ஆனால் புகார் அளிக்க யாரும் முன்வரவில்லை. இதனால் அந்த வாலிபரை எச்சரித்து எழுதி வாங்கி கொண்டு போலீசார் திருப்பி அனுப்பினர்.

மேலும் ஆசிரியையை வீட்டுக்கு செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் வீட்டுக்கு சென்றால் என்னை கொலை செய்து விடுவார்கள் என ஆசிரியை கூறினார். ஆகவே அவரை நெல்லை மகளிர் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

விசிக கொடியை நட்டுட்டோம்.. இந்த இடம் எங்களுக்குத்தான்.. சிறுத்தைகள் அட்டூழியம்..!
ஐசியூ-வில் இருந்த 29 வயது இளம்பெண் அலறி கூச்சல்.. 3 மாதத்திற்கு பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்