இன்ஸ்டாகிராமில் காதல் ! விவாகரத்தான பெண் என்ஜினீயரை ஏமாற்றி 7 லட்சம் ஆட்டயப்போட்ட கேரள இளைஞர் !!

By Selvanayagam PFirst Published Aug 5, 2019, 9:50 AM IST
Highlights

இன்ஸ்டாகிராமல் காதலித்து திருமணம்செய்வதாக கூறி பெண் என்ஜினியரிடம் 7 லட்சம் பறித்த கேரள  இளைஞதை போலீசார் கைது செய்துள்ளனர். விவகாரத்தான அந்த பெண் என்ஜினியர் தற்போது ஏமாந்து நிற்கிறார்.

கோவை சேர்ந்த 35வயது பெண் என்ஜினீயர் மல்லிகா. இவர் , கணவரிடம் விவாகரத்துபெற்று தனியாகவசித்து வருகிறார். சொந்தமாக ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தார். அப்போது அவருடன் கேரள மாநிலம்ஆலப்புழாவை சேர்ந்த ஜிதின்ஷாஎன்பவர் படித்துள்ளார்.

இந்த நிலையில் ஜிதின்ஷா கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந்தேதிஅந்த பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பராக இணைந்தார். முதலில் பழக்கம் சாதாரணமாக தொடர்ந்தது.  பின்னர் அவர்கள் இருவரும் தங்களதுகுடும்ப சூழ்நிலைகளைபகிர்ந்து கொண்டனர்.

பெண் என்ஜினீயரின் திருமணமுறிவை தெரிந்து கொண்டஜிதின்ஷா, தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவ்வப்போது ஆறுதல் வார்த்தைகளையும் பேசியுள்ளார்.

இது கணவரை விவாகரத்து செய்த பெண் என்ஜினீயருக்கு ஆறுதலாக இருந்தது. மேலும் அவர் மீது ஈர்ப்பு தோன்றியது.இதை புரிந்துகொண்ட ஜிதின்ஷா, ஒரு கட்டத்தில் பெண் என்ஜினீயரிடம்உன்னை திருமணம்செய்து கொள்ள விரும்புகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார். அவரது காதல் மொழியில் மயங்கியஅந்த பெண்என்ஜினீயர் அவரிடம் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.

பின்னர்  நாம்திருமணத்துக்கு பிறகுவெளிநாட்டில் குடியேறி விடலாம். அதற்காக வெளிநாட்டில்வேலை தேடுகிறேன்.அதற்கு பணம்செலவாகும் என்று கூறி அவ்வப்போது பணம் வாங்கியுள்ளார்.

அந்த வகையில் ஜிதின்ஷா, பெண் என்ஜினீயரிடம் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.7 லட்சம் வரை பணம் பறித்துள்ளார். மேலும் பெண் என்ஜினீயரின் கிரெடிட் கார்டையும் வாங்கி அதில் இருந்தும் பணத்தை எடுத்து உள்ளார்.

இந்த நிலையில்கோவை பெண் என்ஜினீயரிடம் கடந்த மாதம் 14-ந்தேதி அமெரிக்காவில் இருந்து வாட்ஸ் அப் மூலம் ஒரு பெண் பேசியுள்ளார். அப்போது அந்த பெண், தான் ஜிதின்ஷாவின் மனைவி என்றும், அவர் சமூகவலைத்தளம் மூலம் பல பெண்களிடம் பழகி திருமணம்செய்வதாக கூறி ஏமாற்றி பணம் பறிப்பதாகவும், இதனால் அவரைவிட்டு பிரிந்து அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த கோவை பெண்என்ஜினீயர், தான் ஏமாற்றப்பட்டது குறித்து கடந்த21-ந்தேதி கோவை வந்த ஜிதின்ஷாவிடம் கேட்டு உள்ளார். உடனே அவர் கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது தான் ஜிதின்ஷாவின் மோசடி பற்றி பெண் என்ஜினீயருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து கோவை குனியமுத்தூர் போலீசில் பெண் என்ஜினீயர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில்,ஜிதின்ஷா மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ஜிதின்ஷாவை மடக்கி பிடிக்க திட்டமிட்டபோலீசார், பெண் என்ஜினீயரின் நண்பர்கள் மூலம்சமரச பேச்சுவார்த்தை நடத்தஅழைப்பது போன்றுஅவரை வரவழைத்தனர். இதை நம்பிய அவரும் கோவை வந்தார். அப்போது ஜிதின் ஷாவை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

click me!