4 வயது குழந்தையின் கண்முன்னே பயங்கரம்... தாய், தந்தை கொடூரமாக வெட்டி படுகொலை..!

Published : May 12, 2020, 06:41 PM ISTUpdated : May 12, 2020, 06:45 PM IST
4 வயது குழந்தையின் கண்முன்னே பயங்கரம்... தாய், தந்தை கொடூரமாக வெட்டி படுகொலை..!

சுருக்கம்

ஊரடங்கு நேரத்தில் வீடு புகுந்து 4 வயது சிறுமியின் கண்முன்னே தாய், தந்தை சராமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் வீடு புகுந்து 4 வயது சிறுமியின் கண்முன்னே தாய், தந்தை சராமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் அருகே உள்ள ராயனூர் தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (37), ஏ.சி. மெக்கானிக். இவரது மனைவி தீபிகா (28). இவர்களுக்கு அக் ஷதா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ரங்கநாதன் தனது குடும்பத்துடன் வெள்ளியணை அருகே உள்ள மணவாடி அய்யம்பாளையத்தில் வாடகை வீட்டில் குடியேறினார். ரங்கநாதனின் பாட்டி பாப்பம்மாளுக்கு கரூர் ராயனூர் தில்லை நகர் பகுதியில் 4 சென்ட் நிலம் உள்ளது. இதனை அவர் தனது மகள்கள் கண்ணம்மாள், ராணி ஆகியோருக்கு பிரித்து கொடுத்துள்ளார்.

கண்ணம்மாள் மகன் ரங்கநாதனுக்கும், தங்கை ராணி மகன்கள் பார்த்திபன், கவுதமன், பிரவீன் ஆகியோருக்கும் அந்த நிலம் தொடர்பாக 10 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதத்தில் நேற்று இரவு ரங்கநாதன் வீட்டுக்கு வந்த சகோதரர்கள் 3 பேரும் ரங்கநாதன் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக குழந்தையின் கண்முன்னே வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும்  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்